நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் வெளியான எரிவாயு 500,000 சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியது

கோலாலம்பூர்:

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தில் வெளியான எரிவாயு  500,000 சமையல் எரிகலன்களை நிரப்பக் கூடியதாகும்.

சிலாங்கூரின் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

அதில் வெளியான எரிவாயு, அரை மில்லியன் 14 கிலோகிராம் சமையல் எரிகலன்களை நிரப்பக்கூடியதாகும்.

உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொடர்பு ஆகியவற்றறுக்கான சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை ஆவணங்களில் இது தெரியவந்துள்ளது.

அச்சம்பவத்தில் சுமார் 400 மில்லியன் கன அடி எரிவாயு வெளியானதாக பெட்ரோலியப் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் ஹுஸ்தின் செ அமாட் தெரிவித்தார்

தீயணைப்பு, மீட்புப் பிரிவிடமிருந்து பெற்ற தகவல்களை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset