நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்கி, மின் வணிகக் கடன்களே ஆசிரியர் தனது சொந்த மனைவியை வெட்டிக் காயப்படுத்தியதற்கான காரணமாக இருக்கலாம்: போலிஸ்

ஜார்ஜ்டவுன்:

வங்கி, மின் வணிகக் கடன்களே ஆசிரியர் தனது சொந்த  மனைவியைக் காயப்படுத்தியதற்கான காரணமாக இருக்கலாம்.

தென் மேற்கு மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இதனை தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை இங்குள்ள சுங்கை அராவில் உள்ள தாமான் துனாஸ் மூடாவில் நடந்த ஒரு சம்பவத்தில், ஆசிரியர் ஒருவர் தனது மனைவியை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு  வங்கிக் கடன்,  மின் வணிக கடன் தவணைகளின் சுமையே காரணம் என்று நம்பப்படுகிறது.

முதற்கட்ட போலிஸ் விசாரணையில் 30 வயதான சந்தேக நபர் மின் வணிக தளம் மூலம் வாங்கிய பொருட்களுக்கான தவணைகளை செலுத்துவதோடு, பங்கு முதலீட்டிற்காகவும் வங்கிக் கடனைப் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை. விசாரணையில் தம்பதியினரின் சண்டைக்குக் காரணம் கடன் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset