நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலரின் ஆதரவு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது: சம்சுல் ஹரிஸ் தாயார்

செமினி:

பலரின் ஆதரவு எனக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது என்று சம்சுல் ஹரிஸின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் கூறினார்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளரான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் அண்மையில் காலமானார்.

இந்நிலையில் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டும் செயல்முறை முடிந்தது.

இவ்வேளையில் பொதுமக்களின் ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பிரார்த்தனைகள், ஊக்க வார்த்தைகள் உட்பட பல்வேறு வடிவங்களில் சமூகத்தால் வழங்கப்பட்ட ஊக்கம் தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது.

அல்ஹம்துலில்லாஹ், முதல் செயல்முறை (கல்லறையை மீண்டும் தோண்டும்) முடிந்தது. அதில் நான் திருப்தி அடைகிறேன்.

அடுத்து, இரண்டாவது படிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது இரண்டாவது பிரேத பரிசோதனை செயல்முறையை செயல்படுத்துவதாகும்.

இன்று காலை இங்குள்ள கம்போங் ரிஞ்சிங் ஹுலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset