நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸ் மரணம் குறித்த விசாரணை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: வழக்கறிஞர்

செமினி:

சம்சுல் ஹரிஸ் மரணம் குறித்த விசாரணை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

சம்சுல் ஹரிஸ் குடும்ப வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் அரா சிங் இதனை வலியுறுத்தினார்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) பயிற்சியாளர் சம்சுல் ஹரிஸ் ஷம்சுடினின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை சட்டத்துறை தலைவர் அலுவலகம் நடத்த வேண்டும்.

இரண்டாவது பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.

ஆரம்பத்தில் சட்டத்துறை தலைவர் அலுவலகம் பிரேத பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்த போதிலும், 

நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்த பின்னர் அது இறுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனை கோரப்பட்ட ஷாரா வழக்கைப் போலவே, உண்மையை அடைய ஒரு விசாரணையும் கட்டாயமாக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

இன்று செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் ஹுலு இஸ்லாமிய மையத்து கொல்லையில் சம்சுல் ஹாரிஸின் உடலை தோண்டி எடுத்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset