நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மொஹைதின் மீதான பிரதமரின் குற்றச்சாட்டுகள்; எம்சிஎம்சியின் அறிக்கை கிடைக்கவில்லை: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மொஹைதின் மீதான பிரதமரின் குற்றச்சாட்டுகள் தொடர்பில்  எம்சிஎம்சியின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை.

அரசாங்க பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக எம்சிஎம்சியிடம் இருந்து எந்த அறிக்கையும் எனக்கு கிடைக்கவில்லை.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் வெளிநாட்டினருக்கு ரோன் 95 பெட்ரோல் மானியங்களை வழங்குவதை ஆதரித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் இது தொடர்புடையதாகும்.

எனக்கு இன்னும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை.

முழு அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என்று கேட்டதற்கு ஃபஹ்மி, நீங்கள் எம்சிஎம்சியிடம் கேட்கவேண்டும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset