நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம்; விசாரணைக்கு உதவ 12 பேர் கைது: டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி

ஷாஆலம்:

விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உதவ 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சபாக் பெர்னாமில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து  மூன்றாம் படிவ மாணவர் விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் விசாரணைக்கு உதவ மொத்தம் 12 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் ஒருவர் இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.

போலிசாரிடம் இருந்து எனக்குக் கிடைத்த ஆரம்பத் தகவலின்படி 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் முழுமையான, தொழில்முறை விசாரணையை நடத்துவதை நான் போலிசாரிடம் விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset