நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஸ்ரீ சரவணன், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமைப்பாட்டு அமைச்சின் நண்பர்கள் குழுவில் நியமிக்கப்பட்டனர்

புத்ராஜெயா:

டத்தோஸ்ரீ சரவணன், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் நண்பர்கள் குழுவில் நியமிக்கப்பட்டனர்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் நண்பர்களாக அரசாங்க தொகுதியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் முன்னிலை வகிக்கிறார்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன், செம்பரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் உசைன், புக்கிட் பிந்தாங் ஃபோங் குய் லுன், செராஸ் டான் கோக் வை, பத்து கவான் சோவ் கோன் இயோவ், பண்டார் துன் ரசாக் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், கோம்பாக் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி ஆகியோரும் இதில் அடங்குவர்.

மேலும் சுங்கைப்பட்டாணி டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி, பத்தாங் லுபோர் முகமது ஷஃபிசான் கெப்லி, லுபோக் ஹந்து ராய் அங்கௌ அனாக் கிங்கோய் ஆகியோரும் அக்குழுவில் அடங்குவர்.

இவர்களுக்கான நியமனக் கடிதத்தை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங் வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset