நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டும் பணி நிறைவடைந்தது

செமினி:

சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டும் பணிகள் காலை 9 மணிக்கு நிறைவடைந்தது.

மறைந்த ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) கேடட் அதிகாரி சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதினின் கல்லறையை மீண்டும் தோண்டும் பணி  இன்று காலை தொடங்கியது.

சுமார் 9 மணியளவில் அப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

சம்சுல் ஹாரிஸின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் காலை 9.37 மணிக்கு கம்போங் ரிஞ்சிங் ஹுலு இஸ்லாமிய மையத்து கொல்லை பகுதியிலிருந்து புறப்பட்டது.

ஆம்புலன்ஸுடன் பல போலிஸ் வாகனங்கள் பின் தொடர்ந்து செல்வதைக் காண முடிந்தது.

ஆம்புலன்ஸ் வெளியேறும்போது,   அப்பகுதிக்கு முன்னால் கூடியிருந்த குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தக்பீர் முழக்கங்கள் எழுந்தன.

சம்சுல் ஹரிஸின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset