நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடர் நிலநடுக்கம்: ஜொகூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பாதுகாப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ள உத்தரவு

ஜொகூர்பாரு:

தொடர் நிலநடுக்கத்தால் ஜொகூரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பாதுகாப்புக்குரிய பிரார்த்தனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜொகூர் சிகாமட்டில் நான்காவது முறையாக பலவீனமான நிலநடுக்கத்தின்  அதிர்வுகள் பதிவாகி உள்ளது.

இதனால்  மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக பிரார்த்தனை மேற்கொள்ள மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்களில்  வெள்ளிக்கிழமை ஸுராத் ஹஜாத், துஆ - பிரார்த்தனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை எல்லா மஸ்ஜித்களிலும் தொழுகைக்குப் பிறகு ஸுராத் ஹஜாத்,  துஆ செலாமாத் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜொகூர் மாநில இஸ்லாமிய மத விவகாரக் குழுவின் தலைவர் முகமட் ஃபரேத் முஹம்மத் காலித் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset