நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்சார தடையால் கேஎல்ஐஏ முனையம் 2இன் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை

சிப்பாங்:

மின்சார தடையால் கேஎல்ஐஏ முனையம் 2 இன் செயல்பாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இதனை உறுதிப்படுத்தியது.

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2இல் தற்காலிக மின் தடை ஏற்பட்டது.

இந்த மின் தடையால் விமான நிலையத்தின் அத்தியாவசிய சேவைகளைப் பாதிக்கவில்லை.

மேலும் கேபிள் இணைப்பின் முடிவில் ஏற்பட்ட மின் தீப்பொறி காரணமாக பிற்பகல் 2.15 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தின் போது விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset