நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளஸ் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரிக்கும்

கோலாலம்பூர்:

தொடர் விடுமுறையை தொடர்ந்து பிளஸ் நெடுஞ்சாலைகளில் பயணக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரிக்கும்.

பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம் ஓர் அறிக்கையில் இதனை கூறியது.

நாட்டின் 68ஆவது சுதந்திர தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு மலேசியர்களுக்கு தொடர்ச்சியான விடுமுறை கிடைத்துள்ளது.

இதனால் இன்று முதல் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் அதன் நெடுஞ்சாலைகளில் ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.

ஆகையால் நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

 சுமூகமான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று பிளஸ் அறிவுறுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset