
செய்திகள் மலேசியா
28,000த்திற்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினர் நாடு கடத்தப்பட்டனர்: சைபுடின்
புத்ராஜெயா:
மலேசியாவில் இருந்து 28,000த்திற்கும் மேற்பட்ட அந்நிய நாட்டினர் நாடு கடத்தப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 6 வரை மலேசியாவில் இருந்து இவர்கள் நாடு கடத்தப்பட்டப்பட்டனர்.
1959/63 குடிவரவுச் சட்டத்தின் கீழ் 28,525 நபர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இந்த எண்ணிக்கையில் 21,039 பேர் ஆண்கள் (74%) ஆவர். 6,145 பேர் பெண்கள் (21%) ஆவர்.
778 சிறுவர்கள் (3%), 563 (2%) சிறுமிகள் என்று நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் கூறினார்.
நாடு கடத்தப்பட்டவர்களில் இந்தோனேசியர்கள் 11,085 பேருடன் அதிகபட்சமாக உள்ளனர்.
அதைத் தொடர்ந்து மியன்மார் (4,885), பிலிப்பைன்ஸ் (4,885) உள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2025, 6:28 pm
கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை பிரிவு 1; செப்டம்பர் 30 வரை டோல் கட்டணம் இல்லை: பிரதமர்
August 29, 2025, 6:24 pm
மொஹைதின் மீதான பிரதமரின் குற்றச்சாட்டுகள்; எம்சிஎம்சியின் அறிக்கை கிடைக்கவில்லை: ஃபஹ்மி
August 29, 2025, 6:22 pm
பகடிவதை பிரச்சினைகளைக் கையாள அரசாங்கம் சிறப்புக் குழுவை அமைக்கும்: ஃபஹ்மி
August 29, 2025, 1:17 pm
பலரின் ஆதரவு எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது: சம்சுல் ஹரிஸ் தாயார்
August 29, 2025, 1:15 pm
சம்சுல் ஹரிஸ் மரணம் குறித்த விசாரணை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்: வழக்கறிஞர்
August 29, 2025, 12:56 pm
தொடர் நிலநடுக்கம்: ஜொகூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பாதுகாப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்ள உத்தரவு
August 29, 2025, 10:54 am