நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டில் 4ஆவது முறையாக நில நடுக்க அதிர்வுகள் பதிவானது

சிகாமட்:

ஜொகூர் சிகாமட்டில் இன்று அதிகாலை 4ஆவது முறையாக நில நடுக்க அதிர்வுகள் பதிவானது.

இன்று அதிகாலை சிகாமட்டில் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவான பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது.

து இந்த வாரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நான்காவது நிகழ்வாகும்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில், 

அதிகாலை 4.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் செகாமட்டில் இருந்து வடகிழக்கில் சுமார் 22 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 2.7° வடக்கு, 102.9° கிழக்கில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

இதனால் ஜொகூரில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

மெட் மலேசியா இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும்.

மேலும் ஏதேனும் கூடுதல் தகவல்கள் இருந்தால்  அவ்வப்போது தெரிவிக்கப்படும்  என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset