நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செமினியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14ஆவது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணம்

செமினி:

செமினியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14ஆவது மாடியில் இருந்து விழுந்த பெண் மரணமடைந்தார்.

காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று இங்குள்ள செமினியில் உள்ள தனது 14ஆவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார்.

மாலை 5.18 மணிக்கு போலிஸ்க்கு  இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.

இந்தச் சம்பவத்தை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிடத்தின் பாதுகாப்புக் காவலர் நேரில் பார்த்தார்.

48 வயதுடைய பெண் ஒருவர் தனது 14ஆவது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

பின்னர் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்து மரணமடைந்ததாக நம்பப்படுகிறது.

தலையிலும் உட்பட உடலில் பல பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

மரணமடைந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset