நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த சம்சுல் ஹரிஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் பரவலாக கூடியுள்ளனர்

செமினி:

மறைந்த சம்சுல் ஹரிஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் பரவலாக கூடியுள்ளனர்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலபேஸ்) பயிற்சியாளரான மறைந்த சம்சுல் ஹரிஸ் ஷம்சுதீனின் கல்லறையை மீண்டும் தோண்டும் பணி இன்று காலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது பிரேத பரிசோதனை செய்யும் நோக்கில் அவரின் கல்லறை மீண்டும் தோண்டப்படுகிறது.

இதனால் காலை 7 மணி முதலே, செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் ஹுலு இஸ்லாமிய மையத்து கொல்லையின் பிரதான வாயிலுக்கு வெளியே உள்ள பகுதி, குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்களால் நிரம்பி வழியத் தொடங்கியது.

மக்கள் கல்லறைப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க, கல்லறைக்கு முன்பாக கடுமையான போலிஸ் கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டது.

கல்லறைகளை மீண்டும் தோண்டும் செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் தேவையற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்கும் இது செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset