நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அலுவலகம், அரசு நிறுவனங்கள் குறித்து சுஹாகாம் விசாரிக்க வேண்டும்: நைமா கோரிக்கை

கோலாலம்பூர்:

பிரதமர் அலுவலகம், அரசு நிறுவனங்கள் குறித்து  சுஹாகாம் விசாரணை நடத்த வேண்டும்.

மறைந்த துன் டாய்மின் மனைவி நைமா காலிட் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

பிரதமர் அலுவலகம், சட்டத்துறை தலைவர் அலுவலகம், ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள்,  கவலைகள் குறித்து சுஹாகாம் விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பில் நைமா சுஹாகாம் தலைவர் ஹிஷாமுடின் யூனுஸிடம் ஆணையத்தின் தலைமையகத்தில் மகஜர் ஒன்றை வழங்கினார்.

மேலும்  அவரது குடும்பத்திற்கு  அச்சுறுத்தல்கள் உள்ளன என்று கூறி அந்த மகஜரை அவர் ஒப்படைத்தார்.

இது நமது நிறுவனங்களின் நேர்மை, சட்டத்தின் ஆட்சி, ஒவ்வொரு மலேசியரின் உரிமைகள் பற்றியதாகும்.

அமலாக்க முகமைகள் சட்டத்தின் ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டால் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. 

பொறுப்புக்கூறல் இல்லாமல், அதிகாரம் என்பது ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக மாறுகிறது.

குறிப்பாக இது பாதுகாப்பிற்காக அல்ல என்று நைமா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset