நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்திற்கான 4 முக்கிய திட்டங்கள்; விரைவாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

இந்திய சமூகத்திற்கான 4 முக்கிய திட்டங்கள் விரைவாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமீபத்தில்  40 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இத்திட்டங்கள் முயற்சிகள் விரைவாகவும், வெளிப்படையாகவும், திறமையாகவும் மேற்கொள்ளப்படும்.

தேசிய நேர்மைப் பிரிவு,  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்புடன், தெளிவான கண்காணிப்புடன் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய வளர்ச்சி செயல்பாட்டில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உறுதிப்பாடு என்பது தெளிவாகிறது. 

ஒதுக்கீட்டின் ஒவ்வொரு சதவீதமும் முழு நேர்மையுடன் நிர்வகிக்கப்படும்.

இதனால் அது இலக்கு பெறுநர்களைச் சென்றடைந்து நீடித்த தாக்கத்தை வழங்கும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset