நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது

சிகாமட்:

சிகாமட்டில் நேற்று இரவு 7.56 மணிக்கு 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட முதல் சம்பவத்திற்குப் பிறகு நடந்த நான்காவது நிலநடுக்கமாகும்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில், 

சிகாமட்டில் இருந்து வடக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது 2.6 டிகிரி வடக்கு, 102.8 டிகிரி கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் நிலைமை மற்றும் வளர்ச்சியை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset