நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் மிகப்பெரிய இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; பங்சார் சௌத்தில் 400 பேர் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் மிகப்பெரிய இணைய மோசடி கும்பலாக சந்தேகிக்கப்படும் 400 பேரை போலிசார் பங்சார் சௌத்தில் கைது செய்தனர்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று இங்குள்ள பங்சார் சௌத்தில் உள்ள ஒரு வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 400 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் கால் சென்டர் முகவர்களாக பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறை குழுவினர் கோலாலம்பூர் போலிசாரும் இணைந்து பொதுத் தகவல், உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டது.

இதில் பெண்கள் உட்பட பல அந்நிய நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகமான பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் விசாரணை இன்னும் தொடர்கிறது. 

விரைவில் ஒரு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset