
செய்திகள் மலேசியா
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது; சிறந்த சுதந்திரத் தின பரிசு: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இது அவர்களுக்கான சிறந்த சுதந்திரத் தின பரிசாகும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
சுமார் 1.2 மில்லியன் தொழிலாளர்களின் அவல நிலையைப் பாதுகாப்பதற்கான கிக் தொழிலாளர்கள் மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்ற பிறகு பெரும்பான்மை வாக்குகளால் இது நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மசோதாவின் இரண்டாவது, மன்றாவது வாசிப்புகளை தாக்கல் செய்தார்.
கடந்த திங்கட்கிழமை முதல் வாசிப்பில் கிக் தொழிலாளர்களின் வரையறை, புகார் வழிமுறைகள், கட்டண விகிதங்கள், சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய கூறுகளுடன் சிம்மால் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இரண்டாவது வாசிப்பை தாக்கல் செய்தபோது, மசோதா சிறந்த பதிப்பு. நிபுணர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிக் தொழிலாளர்களுக்கு சிறந்த சுதந்திர பரிசாக மசோதா நிறைவேற்றப்படுவதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள்.
நமது நாடு தேசிய தினத்தைக் கொண்டாட இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில்,
பெர்லிஸ் முதல் சபா வரையிலான 1.2 மில்லியன் மலேசிய கிக் தொழிலாளர்களுக்கு இந்த நாடாளுமன்றம் ஒன்றாக சிறந்த மெர்டேக்கா பரிசை வழங்கட்டும் என்று நம்புகிறேன்.
தொழிலாளர்கள் வெறும் பொருளாதார இயந்திரங்கள் மட்டுமல்ல, அவர்கள் தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புபவர்கள் என்று அவர் கூறினார்.
இதன் அடிப்படையில் கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 10:34 pm
சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm