
செய்திகள் மலேசியா
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
கோலாலம்பூர்:
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர் ஒழுங்கு நிர்வாகக் கட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி,
பள்ளிக் கூடங்களில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பகடிவதைச் சம்பவங்கள் 17 விழுக்காடு அதிகரித்தன.
2023ஆம் ஆண்டு பள்ளிகளில் 6,628 பகடிவதைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 7,681க்கு அதிகரித்தது.
கடந்த ஆண்டு நிகழ்ந்த பகடிவதைச் சம்பவங்களில் 1,992, தொடக்கப்பள்ளிகளில் நிகழ்ந்தவை.
5,689 சம்பவங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் நிகழ்ந்தன.
பள்ளி பகடிவதைக் குறித்து கேள்வி எழுப்பிய ஷாஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோஃபுக்குத் ஃபட்லினா எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 10:34 pm
சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:26 pm