
செய்திகள் மலேசியா
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
கோலாலம்பூர்:
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது பியோன் மலேசியா நிறுவனத்திற்கான புதிய அங்கீகாரமாகும்.
பியோன் மலேசியா கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் கிருஷ்ணகுமார் இதனை தெரிவித்தார்.
மலேசிய கல்வி, திவேட் விருது விழா இன்று தலைநகரில் நடைபெற்றது.
உயர்கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தபா பின் சக்முத் இந்த விழாவிற்கு தலைமையேற்று விருதுகளை எடுத்து வழங்கினார்.
இவ்விழாவில் மருத்துவம், சுகாதாரப் பராமரிப்பு கல்வி திட்டங்களுக்கான மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது 2025 பியோன் மலேசியாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது எங்கள் கல்வி வழிகாட்டல் சேவைக்கான ஒரு அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
மேலும் மருத்துவம், சுகாதாரப் பராமரிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பொருளாதார பின்னணியைப் பொருட்படுத்தாமல் தரமான கல்வி அனைத்து மாணவர்களுக்கு சென்று சேரும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த விருது அங்கீகரித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் கனவுகளுக்குத் தடையாக இருக்கும் பொருளாதார சுமை இல்லாமல் எங்கள் கூட்டுப் பல்கலைக்கழகங்களுடன் மருத்துவம், அதை சார்ந்த படிப்பைத் தொடர வேண்டுன்.
அவ்வகையில் தொடர்ச்சியாக 9ஆவது ஆண்டாக மருத்துவம் பயில்வோம் 2025 பிரச்சாரத் திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்
இது 2025 செப்டம்பர், அக்டோபர் 2025 மாணவர் சேர்க்கையை அடிப்படையாக கொண்டதாகும்.
இது குறித்த மேல்விவரங்களுக்கு மாணவர்கள் பியோன் மலேசிய சமூக ஊடக பக்கங்களை வலம் வரலாம் என்று விக்னேஷ் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 10:34 pm
சிகாமட்டில் மீண்டும் 2.5 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm