நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொள்முதல் மசோதாவைத் தடுக்க முடியாததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

கோலாலம்பூர்:

கொள்முதல் மசோதாவைத் தடுக்க முடியாததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அரசாங்க கொள்முதல் மசோதா 2025 இரண்டாவது வாசிப்பில் பிளவு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதை தடுக்கத் தவறியதால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த மசோதா 125 வாக்குகளுக்கு ஆதரவாகவும் 63 வாக்குகளுக்கு எதிராகவும் பெற்று நிறைவேற்றப்பட்டதாக மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

நிதி, பொருளாதாரம் தொடர்பான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவிற்கு இந்த மசோதா கொண்டு வரப்படாததற்கு அதிருப்தி தெரிவித்த தேசியக் கூட்டணி பிரதிநிதிகளின் சூடான விவாதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset