நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா

கோலாலம்பூர்:

பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.

கூட்டரசுப் பிரதேச பிபிபி கட்சியின் தலைவர் சத்தியா இதனை தெரிவித்தார்.

நீர் சேவைக்கான கட்டனத்தை அங்குள்ள சில மக்கள் முறையாக செலுத்தாததால் இந்த முடிவை டிபிகேஎல் எடுத்துள்ளது. 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது டிபிகேஎல் கருணை காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நீர் துண்டிக்கப்பட்டதால் அந்த குடியிருப்பிலுள்ள அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு போதுமான மாத வருமானம் இல்லை. 

அதனால் அவர்களால் முறையாக கட்டணத்தை செலுத்த முடியவில்லை என தன்னிடம் முறையிட்டதாக அவர் கூறினார்.

நீர் சேவை இல்லாததால் அந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளால் பள்ளிக்கு செல்லவில்லை.

மேலும் நீர் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவுகளை தயாரிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தில் கூடினர். 

அவர்களுக்கு உதவும் பொருட்டு பிபிபி கட்சியினர் அங்கு கூடியிருந்தனர்.

அவர்களின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்து சத்தியா, டத்தோ பண்டாரிடமும் கூட்டரசுப் பிரதேச அமைச்சரிடமும் மகஜரை வழங்கினார். இரு தரப்பின் பிரதிநிதிகள் அந்த மகஜரை பெற்றுக் கொண்டனர்.

முறையான வருமானமின்றி தவிக்கும் இந்த தனித்து வாழும் தாய்மார்களுக்கு சமூக நல உதவிகள் பிரிவின் கீழ் மித்ரா உதவ முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset