நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த வீடுகள் தோறும் தேசியக் கொடியை பறக்க விடுவோம்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த சமுதாய மக்கள் வீடுகள் தோறும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து  சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டின் 68ஆவது சுதந்திரத் தினம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த சுதந்திரத் தினத்தை நம் சமுதாய மக்கள் நாட்டுப் பற்றுடன் கொண்டாட வேண்டும்.

காரணம் கடந்த காலங்களில் தோட்டப் புறங்களில் இந்த சுதந்திரத் தினம் பல நிகழ்சிகளின் வாயிலாக கொண்டாடப்படும்.

ஆனால் அதுபோன்ற கொண்டாட்டங்கள் குறைவாகவே உள்ளது. 

இதனால் சுதந்திரத் தினத்தின் உணர்வும் மகத்துவமும் அடுத்த தலைமுறையிருக்கு தெரியாமலேயே உள்ளது.

ஆக தேசியத் தினத்தை முன்னிட்டு பரவலாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

சுதந்திரத் தின கொண்டாட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு நம் சமுக மக்கள் செல்ல வேண்டும்.

குறிப்பாக முடிந்த வரை வீடுகள் தோறும் மக்கள் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என டத்தோ சரவணக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset