நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த புகார்களிக்க சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படும்: அஸாலினா

கோலாலம்பூர்:

குழந்தைகள் பிரச்சினைகள் குறித்த புகார்களிக்க சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படும்.

பிரதமர் துறை சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் இதனை கூறினார்.

குழந்தைகள் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள், விழிப்புணர்வுக்காக அரசாங்கம் ஒரு சிறப்பு அகப்பக்கம் உருவாக்கப்படு.

இது இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நலத் துறையின் தாலியன் காசி போன்ற தற்போதைய சேனல்களுக்கு மேலதிகமாக இந்த அகப்பக்கம் கூடுதல் சேனலாக இருக்கும்.

சட்ட விவகாரப் பிரிவு, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) மற்றும் குழந்தைகள் சேவைகள் அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி வருகிறோம். 

புகார்கள், விழிப்புணர்வுக்காக ஒரு சிறப்பு அகப்பக்கத்தை உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset