நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருநங்கை கொலை வழக்கு விசாரணைக்கு உதவ ஆடவர் ஒருவர் கைது: போலிஸ்

ஈப்போ:

திருநங்கை கொலை வழக்கு விசாரணைக்கு உதவ ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது இதனை தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள கம்போங் ஜாவாவின் ஜாலான் ஹார்லியில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

32 வயதுடைய அந்த நபர் கோலாலம்பூர் டிபிஎஸ் பேருந்து முனையத்தில் இரவு 10 மணிக்கு மைதானார்.

பேரா போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை பிரிவு டி9 இன் உறுப்பினர்களைக் கொண்ட குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரின் வழிகாட்டுதலின் பேரில், இன்று அதிகாலை 2.30 மணிக்கு தாமான் தவாஸ் இடமானில் உள்ள பாதுகாப்புப் பணியகத்திற்கு போலீஸ் குழு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset