
செய்திகள் மலேசியா
தொடர் நிலநடுக்கம்: பேரிடர்களைத் தவிர்க்க பிரார்த்தனைகளுக்கு பகாங் சுல்தான் உத்தரவு
குவாந்தான்:
தொடர் நிலநடுக்கத்தால் பேரிடர்களைத் தவிர்க்க மக்கள் தொடர் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
பகாங் சுல்தான், அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் இவ்வாறு உத்தரவிட்டார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், சூராக்களிலும் நாளை வெள்ளிக்கிழமை இரவு நம்பிக்கை பேரிடர்களை தடுக்க பிரார்த்தனைகளை நடத்த வேண்டும்.
மலேசியாவை உள்ளடக்கிய பல சமீபத்திய பூகம்ப பேரழிவுகளைத் தொடர்ந்து, மக்களின் நல்வாழ்வு, மாநிலத்தின் பாதுகாப்புக்கான அக்கறையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பகாங் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் எப்போதும் தங்கள் பிரார்த்தனைகளை வலுப்படுத்த வேண்டும். வழிபாட்டுச் செயல்களை அதிகரிக்க வேண்டும்.
எந்தவொரு பேரழிவிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதில் ஒன்றுபட வேண்டும்.
பகாங் அரண்மனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm
கோலாலம்பூரில் மிகப்பெரிய இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; பங்சார் சௌத்தில் 400 பேர் கைது: போலிஸ்
August 28, 2025, 5:23 pm