நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் ஷாரா கைரினாவின் குடும்ப வழக்கறிஞர் முக்கிய தரப்பினராக இருக்க நீதிமன்றம் அனுமதி

கோத்தா கினபாலு -

விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் ஷாரா கைரினாவின் குடும்ப வழக்கறிஞர் முக்கிய தரப்பினராக இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முதல் படிவ மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் முழுவதும் முக்கிய தரப்பினராக மாற சட்டக் குழு, மறைந்த ஷாரா கைரினா மகாதீரின் தாயார் நோரைடா லாமாட் ஆகியோரின் விண்ணப்பத்தை கொரோனர் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது.

மாநில நீதிமன்றங்களின் இயக்குநரும் கொரோனர் அஸ்ரீனா அஜீஸால் இந்த முடிவு எடுக்கப்பட்டது

மேலும் இதன் விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் என்றும் புதிய கொரோனர் ஒருவரால் விசாரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த முடிவைத் தொடர்ந்து மறைந்த ஷாரா கைரினாவின் குடும்பத்தின் வழக்கறிஞர் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் அணுக அனுமதிக்கப்பட்டார்.

சாட்சிகளை ஆராய்ந்து குறுக்கு விசாரணை செய்ய, சாட்சிகளை முன்மொழிந்து கொண்டு வர, மரண விசாரணை அதிகாரிக்கு உதவ கூடுதல் ஆவணங்களை வழங்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset