நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முட்டை விநியோகம் சீராக உள்ளது: உற்பத்தி தேவையை விட அதிகமாக உள்ளது

கோலாலம்பூர்:

நாட்டில் முட்டை விநியோகம் சீராக உள்ளது. உற்பத்தி தேவையை விட அதிகமாக உள்ளது.

உணவுப் பாதுகாப்பு, வேளாண்மை துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

கால்நடை சேவைகள் துறையின் தரவுகளின்படி, சந்தையில் கோழி முட்டைகளின் விநியோகம் போதுமானதாகவும் நிலையானதாகவும் உள்ளது.

மேலும் உள்ளூர் உற்பத்தி இப்போது உள்நாட்டு தேவையை விட அதிகமாக உள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் முட்டை மானியங்கள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதைய உற்பத்தித் தரவுகளின் அடிப்படையில் திறந்த சந்தையில் விற்பனை விலைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து சரிசெய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset