நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா மலாய்க்காரர்கள் வீடுகளை சீனர்கள் கைப்பற்றுவதற்கான யுக்தி அல்ல: பிரதமர்

கோலாலம்பூர் -

நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா மலாய்க்காரர்கள் வீடுகளை சீனர்கள் கைப்பற்றுவதற்கான ஒது யுக்தி அல்ல.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

முன்மொழியப்பட்ட நகர்ப்புற புதுப்பித்தல் மசோதா மூலம் மலாய்க்காரர்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

மலாய்க்காரர்களை வெளியேற்ற யாராலும் சூழ்ச்சி செய்யப்படக்கூடிய ஒரு கைப்பாவை நான் அல்ல.

மேலும் சீனர்களுக்கு அவர்களின் வீடுகளை கையகப்படுத்த வழி வகுக்கவும் இல்லை என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மாறாக, நகரத்தில் பாழடைந்த குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மலாய் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

எனவே இதை மலாய்க்காரர்ளின் வீடுகளை கைப்பற்றுவதற்கான சீன உத்தி என்று யாரும் கருத வேண்டாம் என மக்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset