
செய்திகள் மலேசியா
நாட்டில் 2.14 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்; வங்காளதேசத்தவர் மட்டும் 803,322 பேர் உள்ளனர்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் தற்போது 2.14 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள், ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் கேட்ட கேள்விக்கு சிம் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் எழுத்துப்பூர்வ பதிலில், ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கை குறித்த முழுமையான விளக்கத்தை பெற அமைச்சர் குடிநுழைவுத் துறைக்கு பரிந்துரைத்தார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்களில் ஆக அதிக எண்ணிக்கையில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் 803,322 பேர் நாட்டில் உள்ளனர்.
அதற்கு அடுத்த நிலையில் இந்தோனேசியாவைச்சேர்ந்தவர்கள் 543,514 பேர் உள்ளனர்.
மூன்றாவது நிலையில் நேபாள நாட்டைச்சேர்ந்த 332,712 பேரும் மியான்மரைச் சேர்ந்த 173,630 பேரும் இந்தியாவைச்சேர்ந்த தொழிலாளர்கள் 106,929 பேரும் உள்ளனர்.
பாகிஸ்தான் – 76,011, பிலிப்பைன்ஸ் – 52,340, தாய்லாந்து – 21,822, வியட்நாம் – 16,614, இலங்கை – 5,938, கம்போடியா – 5,655, சீனா – 4,796, லாவோஸ் – 1,491, உஸ்பெகிஸ்தான் – 12 கஜகஸ்தான் – 3 ஆகியோர் அந்நிய நாட்டவர் மலேசியாவில் பணிபுரிகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2025, 7:51 pm
கேஎல்ஐஏ விமான நிலையம் இருளில் மூழ்கியதற்கு 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்: அந்தோனி லோக்
August 28, 2025, 7:47 pm
பிபிஆர் கம்போங் முஹிபா வீடுகளுக்கான நீர் சேவை துண்டிப்பு; குடியிருப்பாளர்கள் அவதி: சத்தியா
August 28, 2025, 6:47 pm
சிறந்த மாணவர் ஆலோசனை தலைமைத்துவ விருது; பியோன் மலேசியாவிற்கான புதிய அங்கீகாரம்: விக்னேஷ்
August 28, 2025, 5:27 pm
பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: ஃபட்லினா
August 28, 2025, 5:26 pm
கோலாலம்பூரில் மிகப்பெரிய இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; பங்சார் சௌத்தில் 400 பேர் கைது: போலிஸ்
August 28, 2025, 5:23 pm