நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் வேளாண்மைப் பொருள்களின் ஏற்றுமதிக்குச் சிக்கல்?

கோலாலம்பூர்:

மலேசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காடழிப்பு (deforestation) விதிகளின்கீழ் அதன் வேளாண்மை ஏற்றுமதிக்குத் திட்டங்களை வகுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்பீட்டில் மலேசியா 'Standard risk' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அது பழைய தகவல்களின் அடிப்படையில் முடிவானது என்று மலேசியா கூறுகிறது.

அதனை மாற்றி 'Low risk' என்ற பிரிவை அடைய மலேசியா விரும்புகிறது.

இல்லாவிட்டால் வேளாண்மைப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'Standard risk' என்ற பிரிவில் உள்ள நாடுகளிலிருந்து அனுப்பப்படும் பொருள்களில் 3 விழுக்காட்டினை அதிகாரிகள் சோதனை செய்வார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய காடழிப்பு விதிமுறைகள் இந்த ஆண்டு டிசம்பரில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் மலேசியா இந்தப் பிரச்சினையைக் கவனமாக அணுகுகிறது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset