நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா: விமரிசையாக நடைபெறுகிறது

கோலாலம்பூர்:

கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து விநாயக பெருமானை வணங்கி செல்கின்றனர்.

விநாயகப் பெருமானுக்கு முதன்மை விழாவான விநாயர் சதூர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று இரவு தங்க ரதத்துடன் தொடங்கியது.

குறிப்பாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா கொடியேற்றி இவ்விழாவை தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

அதே வேளையில் பக்தர்கள் திரளாக வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். 

வேலை நாள் என்பதால் பக்தர்கள் தொடர்ந்து ஆலயத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset