நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் மரணம் குறித்த விசாரணைக்கு புக்கிட் அமான் சிறப்பு விசாரனை பிரிவு பொறுப்பேற்றுள்ளது: டத்தோ குமார்

கோலாலம்பூர்:

சம்சுல் ஹரிஸின் மரணம் குறித்த விசாரணைக்கு புக்கிட் அமான் சிறப்பு விசாரனை பிரிவு பொறுப்பேற்றுள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

பாலப்ஸ் கேடட் அதிகாரி சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் கடந்த மாதம் காலமானார்.

இந்நிலையில் அவரின் மரணம் குறித்த விசாரணையை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உட்பட்ட சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று முதல் பொறுப்பேற்றுள்ளது.

ஷாஆலம் உயர் நீதிமன்றம் நேற்று சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டி இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இது நடந்தது.

மேலும் நடவடிக்கை ஒருங்கிணைப்பதற்காக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற போலிஸ் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset