நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹாரிஸ் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை போலிஸ் உடனடியாக அமல்படுத்த வேண்டும்: சைபுடின்

கோலாலம்பூர்:

சம்சுல் ஹாரிஸ் வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை போலிஸ் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் கேடட் அதிகாரி  சம்சுல் ஹாரிஸ் கடந்த மாதம் காலமானார்.

அவர் தொடர்பான ஒவ்வொரு நீதிமன்ற தீர்ப்பையும் உடனடியாக செயல்படுத்துவதாக போலிஸ் உறுதியளித்துள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான நடைமுறை ஒரு தீவிரமான செயல்முறையாகும்.

காரணம் இது நீதிபதிகள், மருத்துவ குழுக்கள், குடும்பத்தினர், போலிசார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியது.

முடிவு எடுக்கப்பட்டவுடன்  ஷாராவின் வழக்கைப் போலவே போலிசார் பின்தொடர்ந்து செயல்படும். 

இதில் மாஜிஸ்திரேட், மருத்துவக் குழு, குடும்பத்தினர், போலிஸ்,  மருத்துவர்கள் உள்ளனர்.

உடலை மீண்டும் தோண்டி எடுப்பது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது முதல் மருத்துவ நிபுணர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் வரை அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதே போலிஸ் துறையில்  பங்கு. 

எனவே அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset