நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கங்காரில் திடீர் புயல்: ஸ்ரீ பெர்லிஸ் பள்ளியைச் சேர்ந்த 207 மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வியைத் தொடர்ந்தனர்

கங்கார்:

கங்காரில் ஏற்பட்ட திடீர் புயலை தொடர்ந்து ஸ்ரீ பெர்லிஸ் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த 207 மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வியை தொடர்ந்தனர்.

பெர்லிஸ் மாநில கல்வி இயக்குனர் ரோஸ் அசா சே அரிஃபின் இதனை தெரிவித்தார்.

நேற்று பிற்பகலில் வீசிய புயலில் பள்ளியின் கூரையின் ஒரு பகுதி சேதமடைந்தது.

இதனால் அப் பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 207 மாணவர்கள் தற்காலிகமாக வீட்டு அடிப்படையிலான கற்பித்தல், கற்றல் அமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாலை 5.20 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் 70 மாணவர்களைக் கொண்ட இரண்டு வகுப்புகள் கொண்ட முதலாம் ஆண்டு வகுப்புகள்,  இரண்டாம் ஆண்டின் 74 மாணவர்கள், பாலர் பள்ளி (ஒரு வகுப்பு, 25 மாணவர்கள்), 38 மாணவர்களைக் கொண்ட ஐந்து சிறப்பு கல்வித் திட்ட ஒருங்கிணைப்பு வகுப்புகள் ஆகியவற்றை பாதித்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset