நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிதி அமைச்சுடன் இணைக்கப்பட்ட நான்கு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன

புத்ராஜெயா:

நிதி அமைச்சுடன் இணைக்கப்பட்ட நான்கு முக்கிய நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

2023ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையின் தகவல்களின் அடிப்படையில், நிதியமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் பிரசரனா, மாஸ் ரேப்பிட் டிரான்சிட், கேடிஎம்பி, ஜம்பாத்தான் கேடுவா ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

பொது உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக ரயில் போக்குவரத்து, பாலம் உள்கட்டமைப்பு, மலிவான கட்டணங்களுடன் மக்களின் வசதிக்காக சேவைகளை வழங்கப்படுகிறது.

இதனால் இந்த இழப்புகளைச் சந்தித்துள்ளதாக நிதி அமைச்சு விளக்கியது.

நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக எப்போதும் நிதி மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் செயல்திறனைக் கண்காணிக்க கட்டுப்பாட்டை அதிகரிக்கச் செயல்பட்டு வருகிறது.

இதனால் அமைச்சின் செயல்பாடுகள் அதன் ஸ்தாபனத்தின் நோக்கங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆணைகளுக்கும் ஏற்ப இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset