நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொகுசு கார், ஆடம்பர பைகள் பறிமுதல்; வங்கி கணக்குகளில் 7 மில்லியன் ரிங்கிட் முடக்கம்: டிபிகேஎல்லின் முதன்மை 3 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்தது

புத்ராஜெயா:

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (டிபிகேஎல்) முதன்மை 3 அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்ததுள்ளது.

அவர்களிடம் இருந்து சொகுசு கார், ஆடம்பர பைகள் பறிமுதல் செய்ததுடன் வங்கி கணக்குகளில் 7 மில்லியன் ரிங்கிட் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டிபிகேஎல் மூத்த அதிகாரி உட்பட மூன்று நபர்கள் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் ஜூசா பி தர அதிகாரிகளில் அடங்குவதாக நம்பப்படுகிறது.

எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ சைபூல் எஸ்ரால் அரிபின் அவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

மேலும் இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 16(ஏ)(பி) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset