நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டு வசதி கடன் உத்தரவாதத் திட்டத்தின் வாயிலாக இந்தியர்கள் வீடு வாங்கும் வாய்ப்பை தவறவிட வேண்டாம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

வீட்டு வசதிக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் வாயிலாக இந்தியர்கள் வீடு வாங்கும் வாய்ப்பை தவறவிட வேண்டாம்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.

வீட்டுவசதி கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ்  இந்திய சமூகத்தினரிடையே வீட்டு உரிமையை அதிகரிக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் வெறும் நிதி முயற்சி மட்டுமல்ல.

சீரற்ற வருமானம் காரணமாக வங்கிக் கடன்களைப் பெறுவதில் சிரமம் காரணமாக தற்காலிக வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்கள் அல்லது தற்காலிக வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழியாகும்.

எங்கள் சமூகத்தில் பலர்  இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

ஆனால் இந்தத் திட்டத்தின் இருப்பு பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆக மிகவும் தாமதமாகும் வரை காத்திருக்க வேண்டாம்.

இத்திட்டம் குறிப்பாக வீடு வாங்க முயற்சிக்கும் ஆனால் நிதி பெறத் தவறியவர்களுக்காக உருவாக்கப்பட்டது.

குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை இது மாற்றக்கூடும் என்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே சரியான நேரம் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset