நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்தில் அமைதி, நீதி நிலைநாட்டப்படும் வரை இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்: முஹம்மத் ஹசன்

கோலாலம்பூர்:

பாலஸ்தீனத்தில் அமைதி, நீதி நிலைநாட்டப்படும் வரை  இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ  முஹம்மத் ஹசன் இதனை கூறினார்.

இஸ்ரேலின் தற்போதைய இராணுவ காசாவின் ஆக்கிரமிப்பு, பாலஸ்தீன நிலத்தை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் அவமதிப்பதாகும்.

இஸ்ரேல் இப்போது இரண்டு ஆண்டுகளாக காசாவில் பொதுமக்களைக் கொன்று பட்டினியால் வாட நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையை தேவையான தற்காப்பு என்று முத்திரை குத்தும் அதன் கூட்டாளிகளால் இன்னும் ஆதரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் தொடர்ந்து நிலங்களைக் கைப்பற்றும். உலகம் முழுவதும் அதன் விமர்சகர்களை மிரட்டும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset