நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

22 வாரங்கள், அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சீக்கிரமாக வீடு திரும்புவதைத் தடுக்காதீர்கள்: சுகாதார அமைச்சர் டாக்டர் சூல்கிப்ளி

புத்ராஜெயா:

22 வாரங்கள், அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சீக்கிரமாக வீடு திரும்புவதைத் தடுக்க வேண்டாம்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் இதனை வலியுறுத்தினார்.

கர்ப்பிணி ஊழியர்கள் தங்கள் கர்ப்பம் 22 வாரங்களை எட்டியவுடன் சீக்கிரமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.

இதற்கு பொது சேவைத் துறை சுற்றறிக்கையை அனைத்து சுகாதார வசதி நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டும்.

பல பணிகள் காரணமாக தடைகளை எதிர்கொண்டாலும், துறைத் தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் தற்போதுள்ள நிலையான இயக்க நடைமுறைகளுக்கு  முரணான நடவடிக்கைகளை எடுக்க முடியாது.

சுகாதார வசதிகள் பல்வேறு அறைகூவல்களை எதிர்கொள்கின்றன என்பதை நான் உணர்கிறேன்.

ஆனால் அது விதிகளை மீறுவதற்கு ஒரு சாக்குப்போக்கு அல்ல.

கர்ப்பிணி தாதியர்கள் அல்லது MySTEP உள்ளிட்ட ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், 

அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset