நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான விண்ணப்பம் குறித்து நீதிமன்றம் நாளை தீர்ப்பு 

ஷாஆலம்:

சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான விண்ணப்பம் குறித்து நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

ஸ்கூடாய் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்  ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளர் சம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் திடீரென மரணமடைந்தார்.

இந்நிலையில் அவரின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுத்து இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த முடியுமா என்பதை நாளை ஷாஆலம் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

இறந்தவரின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன் சார்பாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் டத்தோ நரன் சிங்கின் விண்ணப்ப அறிவிப்பின் மீதான சமர்ப்பிப்புகளைக் கேட்ட நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குர்ச்சரன் சிங் ப்ரீத் தேதியை நிர்ணயித்தார்.

விண்ணப்பதாரர் தாக்கல் செய்த வீடியோ பதிவைப் பார்க்க எனக்கு நேரம் தேவை. நீதிமன்றம் நாளை அதன் முடிவை அறிவிக்கும்.

முதல் பிரதிவாதியாக போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயிலைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த கூட்டாட்சி வழக்கறிஞர் நூருல் ஹுடா முஹம்மத் சலாஹுதீனின் வாதங்களைக் கேட்ட பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக யூடிஎம் பலாப்ஸ் கேடட் அதிகாரி மரணக் குழுவின் விசாரணையின் முடிவுகள், சம்பவத்தில் துஷ்பிரயோகத்தின் எந்த அம்சமும் இல்லை என்பதைக் கண்டறிந்தன.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset