
செய்திகள் மலேசியா
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் மரணமடைந்த தாயாருக்கு தவசம் செய்த மகன் சூர்யா
கோலாலம்பூர்:
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் மரணமடைந்த தாயாருக்கு மகன் சூர்யா தவசம் செய்துள்ளார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு சோகம் நடந்து ஒரு வருடம் கழித்து தனது மறைந்த தாயின் மறைவை மகன் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலச் சரிவில் காணாமல் போன 48 வயது இந்தியப் பெண்ணின் மகன்,
துயரத்தின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரார்த்தனை விழாவை நடத்துவதற்காக அந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார்.
மறைந்த ஜி. விஜயலட்சுமியின் மகன் எம். சூர்யா, துயரம் நடந்த இடத்தில் தவசம் சடங்கை செய்தார்.
இந்த சடங்கு இறந்தவருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் மரியாதை ஆகும்.
சூர்யா, மற்றொரு உறவினருடன் சேர்ந்து, பழுதுபார்க்கப்பட்ட நடைபாதையில் ஒரு எளிய சடங்கை நடத்தினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென நில அமிழ்வு ஏற்பட்டு, அவரது தாயார் பாதாள சாக்கடையில் விழுந்து மரணமடைந்தார்.
தவசம் சடங்கின் ஒரு பகுதியாக நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில் தனது தாயின் புகைப்படத்தை வைத்து அதை மலர் மாலைகளால் அலங்கரித்து, வாழை இலைகளில் இனிப்புகள், பழங்கள் அவரது தாயாருக்குப் பிடித்த சில உணவுகள் உள்ளிட்ட பிரசாதங்களை சூர்யா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm