நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய தீவிரவாதம் தொடர்பான பதிவிற்காக இரு ஆடவர்கள் கைது: குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் குமார்

 

கோலாலம்பூர் -
சர்ச்சைக்குரிய தீவிரவாதம் தொடர்பான பதிவிற்காக இரு ஆடவர்களை போலிசார் கைது செய்தனர்.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை தெரிவித்தார்.

எக்ஸ் தளம் உட்பட சமூக ஊடகங்களில் சர்ச்சையைத் தூண்டியபதிவுகள் தொடர்பாக  அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 37, 43 வயதாகிறது.

முதல் சம்பவம் மலேசியா தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டதாகவும், நாட்டில் ஒரு புரட்சி ஏற்படும் என்றும் பதிவிட்ட எக்ஸ் பயனர் @chongkahtze தொடர்பானது ஆகும்.

இரண்டாவது சம்பவம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வீட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்த கருத்துகளைப் பற்றி ஜூலை மாதம் பதிவிட்ட @ifactoreal என்ற பயனர் தொடர்பானது.

சிரியாவின் டமாஸ்கஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலை பிரதமர் விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இது எழுதப்பட்டது.

முதல் வழக்கின் சந்தேக நபர் நாளை வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மற்றொரு சந்தேக நபர் ஆகஸ்ட் 28 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset