நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்தாங்காலி பெரோடுவா தொழிற்சாலையில் தீ விபத்து: 80% அழிந்தது 

கோலாலம்பூர்:

பத்தாங்காலியில் உள்ள பெரோடுவா தொழிற்சாலைக்கான கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 சதவீதம் எரிந்து நாசமானது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அதிகாலை 4.45 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், கோலா குபு பாரு நிலையத்திலிருந்து முதல் தீயணைப்பு இயந்திரம் அதிகாலை 5.07 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முகலிஸ் முக்தார் தெரிவித்தார்.

புக்கிட் சென்டோசா, ராவாங் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்களும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மொத்தம் 26 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததாக அவர் கூறினார்.

100 முதல் 80 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த இரும்புக் கட்டமைப்பு கட்டிடம் குழு சம்பவ இடத்தை அடைந்தபோது ஏற்கனவே தீயில் அழிந்துவிட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset