நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘நாங்கள் அரசு நிதியை கட்சிக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை’: அந்தோணி லோக் 

ஈப்போ:

நேற்று இரவு ஈப்போவில் நடந்த  டிஏபி இரவு உணவு நிகழ்வின் போது, ​​அனைத்து அரசாங்க ஒதுக்கீடுகளும் பொதுமக்களுக்கு சொந்தமானது என்றும், கட்சி நடவடிக்கைகளுக்குப் பதிலாக தேசிய வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அந்தோணி லோக் கூறினார்.

தனது கட்சி தனது அரசியல் திட்டங்களுக்கு அரசாங்க நிதியைப் ஒருபோதும் பயன்படுத்தாது என்று அவர் தெரிவித்தார். 

“டிஏபி இப்போது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், நாங்கள் இரவு உணவு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போதெல்லாம், டிக்கெட் வாங்கத் தயாராக இருக்கும் உறுப்பினர்களிடமிருந்துதான் நிதியை பெறுகிறோம். அவர்கள் தொடர்ந்து வலுவான ஆதரவைத் தந்து வருகிறார்கள். அது கட்சியின் போராட்டத்திற்கான அவர்களின் ஆதரவின் அறிகுறியாகும்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் எப்போதும் கட்சியை அரசாங்கத்திலிருந்து பிரிக்கிறோம். அரசாங்க வளங்களும் நிதிகளும் மக்களுக்கானவை, நாங்கள் அவற்றை கட்சிக்காகப் பயன்படுத்துவதில்லை,” என்று அவர் அழுத்தமாக குறிப்பிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset