நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மஇகா - அம்னோ இடையிலான உறவு இருண்ட நிலையாக மாறி வருகின்றன: டத்தோ சங்கர்

ஷாஆலம்:

சிலாங்கூர் மஇகா - அம்னோ இடையிலான உறவு இருண்ட நிலையாக மாறி வருகின்றது.

அம் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கார் இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில மஇகா அம்னோவுடன் எந்த கூட்டுறவு உறவையும் கொண்டிருக்கவில்லை.

சிலாங்கூர் அம்னோ தலைமையைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்  மஇகாவின் தேசியத் தலைமையும் இதே பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. தேர்தல் காலத்தில் அல்லது அவர்கள் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்யும் போது மட்டுமே எல்உறவுகள் இருக்கும். 

அதன் பிறகு, அம்னோவுக்கு எங்கள்  சேவை தேவைப்படாது.

சிலாங்கூர் மஇகா ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தேசிய முன்னணியுடன் உறவை தொடர விரும்புகிறீர்களா என்று பிரதிநிதிகளிடம் நாங்கள் கேட்டபோது, ​​பெரும்பான்மையானவர்கள் தேவை இல்லை என்று கூறினர். 

இதை நிச்சயமாக நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் கட்சியின் அடிமட்ட குரல் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset