நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரொம்பினில் நிகழ்ந்த விபத்தில் 2 பெண்கள், 3 வயது சிறுமி உயிரிழந்தனர்

குவாந்தான்:

ரொம்பினில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பெண்கள், 3 வயது சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

பகாங் தீயணைப்பு, மீட்புத் துறையின செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்று புக்கிட் செரோக் பண்டார் துன் அப்துல் ரசாக் அருகே உள்ள ஜாலான் குவாந்தான் - சிரம்பானில் ஒரு காரும் நான்கு சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

ஒரு ஆண், நான்கு பெண்கள், ஒரு சிறுமியை ஏற்றிச் சென்ற கார் நெகிரி செம்பிலான் பகாவ்விலிருந்து முவாட்ஷாம் ஷாக்கு சென்று கொண்டிருந்தது

சம்பவ இடத்தில் ​​சம்பந்தப்பட்ட கார் ஒரு ஆடவர் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனத்தில் மோதியது.

இந்த விபத்தின் விளைவாக ஒரு பெண் காரில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.

அதே நேரத்தில் காயமடைந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைக்காக முவாட்ஷாம் ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset