நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோட்டார் சைக்கிள்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின

ஷாஆலம்:

மோட்டார் சைக்கிள்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ சம்பவத்தில் எரிந்து சாம்பலாகின.

சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

ஷாஆலம் செக்‌ஷன் 24 இல் உள்ள டயர் பட்டறையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின.

இச்சம்பவத்தில் 30 வயதுடைய பட்டறையில் ஊழியர் லேசான காயங்களுடன் தப்பினார்.

இவ்விபத்தில் பட்டறை  90 சதவீதம் எரிந்து விட்டது.

மேலும் 37 கார்களும் ஏழு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகின என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset